புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (15:00 IST)

கண்ணீருடன் பிரிந்த யுவ்ராஜ் – பிசிசிஐ செய்தது நியாயமா ?

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கின் தூணாக திகழ்ந்த யுவ்ராஜ் சிங் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங். அந்த இருத் தொடர்களிலும் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார். 2011 ஆம் உலகக்கோப்பைக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய ஆட்டத்திறன் இல்லாத காரணத்தால் அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய அணி வீரர்கள் அனுமதியின்றி வெளிநாட்டுத் தொடர்களில் எதிலும் விளையாட அனுமதி இல்லை என்பதால் எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார். இந்நிலையில் இனி இந்திய அணியிலும் இடம் கிடைக்காது என்ற சூழ்நிலையில் ஓய்வு முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரிலும் அவருக்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இந்திய அணிக்காக இரண்டு உலகக்கொப்பைகளை வென்றுத் தந்துள்ள யுவ்ராஜ் சிங் முறையான இறுதி வழியனுப்புதல் செய்ய தவறியுள்ளது பிசிசிஐ. இது போன்ற பல முன்னனி வீரர்களுக்கும் நடந்துள்ளது. சச்சினைத் தவிர டிராவிட், கங்குலி,  லக்‌ஷ்மண் போன்ற வீரர்களையும் முறையான மரியாதை அளிக்காமல் இப்படிதான் ஓய்வு முடிவை அறிவிக்க வைத்தது பிசிசிஐ. அதனால் யுவ்ராஜ் சிங்குக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கி வழியனுப்பி வைக்காததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.