1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (15:27 IST)

இலங்கையில் ரீமேக்கான "தெறி" ட்ரைலர்! கடுப்பாகி கண்டபடி திட்டிய விஜய் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படத்தில் பிரபல நடிகையான மீனாவின் மகள் பேபி நைனிகா விஜய்க்கு மகளாக நடித்து அசத்தியிருந்தார். 
 
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த இப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் இலங்கையில் சிங்கள மொழியில் ரீமேக்காக உருவாகி வருகிறது. 
 
இப்படத்தின் ட்ரைலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. தற்போது இதனை கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர். குறிப்பாக மெகா ஹிட் அடித்த படங்களை ரீமேக் செய்வதில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுக்கவேண்டியிருக்கும். 

அதிலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்க்கு  தமிழ் நாட்டை தவிர பிற மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். ஆதலால் அவர் இடத்திற்கு மற்றொரு  நடிகரை ரீபிளேஸ் செய்வதை விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
அப்படித்தான் இந்த ட்ரைலரை பார்த்தவர் சகிக்க முடியாமல் சகட்டுமேனிக்கு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். கடுப்பான சில ரசிகர்கள் இதை விட மோசமாக யாராலும் தெறி படத்தை ரீமேக் செய்ய முடியாது என திட்டி கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.