யுவ்ராஜ் ஓய்வு முடிவு – சக வீரர்கள் புகழாரம் !

Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (09:11 IST)
இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து சக வீரர்கள் அவர் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கின் தூணாக திகழ்ந்த யுவ்ராஜ் சிங் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங். அந்த இருத் தொடர்களிலும் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார். 2011 ஆம் உலகக்கோப்பைக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் போராடிய யுவ்ராஜ் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்நிலையில் சகவீரர்கள் அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளையும் அவருடைய தனித்தன்மப் பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

முகமது கைப் : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர். ஒரு அசாதாரணமான கிரிக்கெட் வாழ்வு அவருடையது. ஒவ்வொரு சவாலின் போதும் நீங்கள் வின்னராக வந்துள்ளீர்கள். நீங்கள் நாட்டுக்கு செய்ததை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

விராட் கோஹ்லி : வாழ்த்துகள். இனிமையான நினைவுகளையும் வெற்றிகளையும் விட்டுச் சென்றுள்ளீர்கள். இனி வரும் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். நீங்கள் ஒரு முழுமையான சாம்பியன்

கவுதம் கம்பீர் : வாழ்த்துகள் பிரின்ஸ். இந்தியாவின் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டர் நீங்கள்தான்.உங்களுக்காக 12 ஆம் நம்பர் ஜெர்சியை ரிட்டையர் செய்ய வேண்டும்

விவிஎஸ் லஷ்மண் : யுவியுடன் விளையாடுவதே மகிழ்ச்சியான தருணம்.  கிரிக்கெட் வரலாற்றில் சிறந்தவர்களில் ஒருவராக உங்கள் பெயர் இருக்கும்.

சேவாக் : யுவ்ராஜ் போன்ற ஒரு வீரரைக் காண இயலாது. அவர் நோயையும் பவுலர்களையும் அடித்து நொறுக்கினார். தனது போராட்டக்குணம் மற்றும் மன உறுதி மூலம் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளார். யுவி உனக்கு வாழ்க்கையில் சிறந்தது அமையட்டும்.இதில் மேலும் படிக்கவும் :