இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!
கொழும்பில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 2025 ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா கடைபிடித்து வரும் இந்த 'கைகுலுக்கக் கூடாது' என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிகிறது. இதன் காரணமாக, டாஸ் போடும்போதும் ஆட்டத்திற்கு பிறகும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க வாய்ப்பில்லை.
இது குறித்து கேட்டபோது, "கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம், மற்ற முடிவுகளை நாளை பார்க்கலாம்" என சூர்யகுமார் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
சல்மான் அலி ஆகா கூறுகையில், "விளையாட்டின் உணர்வை மதிக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.
Edited by Siva