மாமியார் மரணம் - இலங்கை திரும்பும் லசித் மலிங்கா !

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (18:39 IST)
தனது மாமியார் மரணமடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு திரும்ப இருக்கிறார்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றியும் இரண்டில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமலும் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இன்று இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளரான மலிங்கா தனது மாமியாரின் மறைவை ஒட்டி இலங்கைக்கு செல்ல இருக்கிறார். அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவர் மீண்டும் இங்கிலாந்தி திரும்ப இருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :