1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mumbai Indian lost a thriller match against lucknow

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

மும்பை இந்தியன்ஸ்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி கடைசி வரை பரபரப்பான ஒன்றாக சென்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோரின் அதிரடியால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டியது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடி இலக்கை நெருக்கமாக கொண்டு சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் ஹர்திக் பாண்ட்யா இருந்தும் மும்பை அணியால் வெல்ல முடியவில்லை. இதன் மூலம் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அடுத்த கட்டுரையில்
நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!