டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணிக்கு இன்னொரு வெற்றி

Last Modified வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (23:29 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய லீக் போட்டியில் மதுரை மற்றும் காரைக்குடி அணிகள் மோதின
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே இழந்தது. காரைக்குடி அணியின் ஒரு வீரர் கூட இன்று உருப்படியாக பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அணியின் கிரன் ஆகாஷ் மற்றும் ஷா தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்

இந்த நிலையில் 94 ரன்கள் என்ற எளிய இலக்கை மிக எளிதில் மதுரை அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காரைக்குடி அணி பந்துவீச்சில் பட்டையை கிளப்பியதால் மதுரை அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டுவதற்குள் எட்டு விக்கெட்டுக்களை இழந்து நூலிழையில் வெற்றி பெற்றது. மதுரை அணியின் கேப்டன் சந்திரன் 25 ரன்களும், செல்வகுமரன் 21 ரன்களும் எடுத்தனர். காரைக்குடி அணியின் சாம், மோகன் பிரசாத் மற்றும் பஃனா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ராஹில் ஷா தேர்வு செய்யப்பட்டார். இன்றைய வெற்றியால் மதுரை அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :