டிஎன்பிஎல் கிரிக்கெட்: முதல் தோல்வியை அடைந்த திண்டுக்கல் அணி

Last Modified வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (00:01 IST)
 
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டி ஒன்றில் திண்டுக்கல் அணி கோவை அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்விதான் திண்டுக்கல் அணியின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. ரஞ்சன்பால் 43 ரன்களும், ஷாருக்கான் 30 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 18.5 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் சுஜய் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்த அணி படுதோல்வி அடைந்துள்ளது 
 
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் திண்டுக்கல் அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி அடைந்த போதிலும் கோவை அணி 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :