எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!
நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சி எஸ் கே அணி. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார்.
அதனைத் தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை வழங்கினர். ஆனால் தொடக்கத்திற்குப் பிறகு ராகுல் திரிபாதி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் அவுட்டானார்கள். ஷிவம் துபே மிகவும் பொறுமையாக விளையாடி வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்தார். கடைசி நேரத்தில் தோனி வந்து 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார். இந்த அதிரடி இன்னிங்ஸ்க்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய தோனி “எனக்கு ஏன் இந்த ஆட்டநாயகன் விருது கொடுத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் அணியில் நூர் அகமது மிகச்சிறப்பாக பந்துவீசினார்” எனக் கூறியுள்ளார். இந்த ஆட்டநாயகன் விருதைப் பெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தோனி.