வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (19:46 IST)

’மது விற்பனை ’அரசின் திட்டம் .. அதனால் எதுவும் செய்ய முடியவில்லை - நீதிபதி வருத்தம்

மதுரை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களூக்கான வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ஆர்வத்துடம் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று தெரிவித்தார்.
 
மேலும்  ஸ்மார்ட் போனை மாணவர்கள் ஆரோக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். பின்னர் ஒரு மாணவர் எழுந்து மது விலக்கு பற்றிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் : தமிழகத்தில் மது அரசின் திட்டமாக உள்ளதால் அதற்கு எதிராக நீதிமன்றங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.