டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி!

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (07:45 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள திருச்சி வாரியர்ஸ் அணி ஐந்திலும் தோல்வி அடைந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் மதுரை மற்றும் காரைக்குடி அணிகளுக்கு எதிராக திருச்சி அணி விளையாடியபோது திருச்சி அணி போட்டியை சமன் செய்தது. இருப்பினும் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்ததால் இந்த தொடரில் மொத்தம் ஐந்து தோல்விகளை திருச்சி அணிபெற்றுள்ளது
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தூத்துக்குடி அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் திருச்சி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. முரளிவிஜய் மிக அபாரமாக விளையாடி 101 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆதித்யா கணேஷ் 56 ரன்கள் எடுத்தார்
178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் ஸ்ரீனிவாசன் 63 ரன்களும், சுப்பிரமணிய சிவா 25 ரன்களும், எடுத்தனர். திருச்சி அணியின் முரளி விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

இன்று திண்டுக்கல் மற்றும் கோவை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :