தோனி, கோலி நட்பை பாராட்டும் லக்ஷ்மண்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் கோலி ஆகியோரின் நட்பு குறித்து முன்னாள் வீரர் லக்ஷ்மண் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதை அடுத்து விராட் கோலி தற்பொது கேப்டனாக உள்ளார். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அணியின் விளையாடி வருகிறார்.
போட்டியின்போது சில நேரங்களில் தோனி கேப்டனாக செயல்படுவதும், கோலி தோனியிடம் ஆலோசனை கேட்பது நடந்து வருகிறது. இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இருவரின் நட்பை பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
கோலிக்கும் தோனிக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதாக எல்லோரும் சொல்லி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருகின்றனர். ஆட்ட களத்திலும் சரி மைதானத்திற்கு வெளியிலும் சரி அவர்கள் எப்போது நெருக்கமாகவே இருக்கிறார்கள்.
கோலிதான் கேப்டன் ஆனால் தோனி பல இடங்களில் கோலியை வழிநடத்துகிறார். மேலும் தோனி கீப்பராக இருப்பதல் அணியில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இவர்களின் ஜோடி கண்டிப்பாக இந்திய அணிக்கு 2019ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று தரும் என்றார்.