1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (12:04 IST)

தோனியை தக்க வைத்துகொள்ளுமா சிஎஸ்கே??

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கவுள்ளன.


 
 
இந்த இரு அணிகளுக்கு தடை விதித்து இருந்த காலத்தில் அந்த அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த இரு சீசனிலும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக களமிறங்கினார்கள். 
 
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் அணிகள் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடக்கூடுமா என விவாதம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாடியுள்ளது. 
 
ஒரு அணியில் குறைந்தபட்சம் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 
 
அணி உரிமையாளர்களில் கோரிக்கை நியாமனதாக இருந்தால் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். 
 
இந்த வீரர்கள் எண்ணிக்கையில் கண்டிப்பாக இரு வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.