ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (19:16 IST)

கோலிக்கு திருமணம்: போட்டியில் இருந்து ஓய்வு இதற்குதானா...

பாலிவுட் நடிகைகளுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் மத்தியில் ஒரு திருமண பந்தம் இருக்கும். 


 
 
அசாருதீன் -சங்கீதா பிஜ்லானி, மனோஜ் பிரபாகர்- பர்ஹீன், யுவராஜ்சிங்- ஹாசல்கபூர் திருமணம் இவை அனைத்தும் அப்படிதான் நடந்தது.
 
தற்போது அந்த வரிடையில் கோலி இணைந்துள்ளார். வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.
 
தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர். இந்நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
 
இவர்களது திருமணம் டிசம்பர் 2 ஆம் வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.