ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (19:16 IST)

முக்கியமான தருணத்தில் அசத்தும் குல்தீப்

டாஸ் வென்று பேட்டிங் செய்து பாகிஸ்தான் அணியின் பாபர் - மாலிக் கூட்டணியை சரியான நேரத்தில் உடைத்து அசத்தியுள்ளார் குல்தீப் யாதவ்.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ட்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக், பஹர் ஷமான் ஆகியோர் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தி அசத்தினார்.
 
இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. மாலிக் - பாபர் அசாம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
 
ஆனால் அது நிலைக்கவில்லை. குல்தீப் பாபர் அசாம் விக்கெட்டை சரியான நேரத்தில் வீழ்த்தில் அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபாஷ் அகமத் 6 ரன்களில் வெளியேறினார்.
 
கேப்டனை தொடர்ந்து நன்றாக ஆடிவந்த மாலிக் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.