வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (19:06 IST)

இந்தியா – பாகிஸ்தான் கிரிகெட் போட்டியை காண வரும் தாவூத் இப்ராகிம் : உளவுத்துறை எச்சரிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியைக் காண சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் வர வாய்ப்புள்ளதாக உலகில் உள்ள 6 முக்கியமான உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்திய போலீஸாரால் பல ஆண்டுகளாக தேடப்படுவரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். இந்நிலையில் தாவூத் மற்றும் டி நிறுவனத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டு பேரும் இந்த போட்டியைக் காண வர வாய்ப்புள்ளது என உலக நாடுகளில் உள்ள ஆறு உளவுத்துறை நிறுவனங்கள் இந்திய உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.