செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (09:36 IST)

பள்ளிக்கூடத்தில் கொடியேற்றிய 3 மாணவர்கள், ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி

பள்ளிக்கூடத்தில் கொடியேற்றிய 3 மாணவர்கள், ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி
பாகிஸ்தானில் பள்ளியில் கொடியேற்றிய மாணவர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பள்ளியில் காலை இறை வணக்கத்திற்காக மாணவர்கள் கொடியேற்ற சென்றுள்ளனர். அந்த கொடி கம்பத்தில் மின்சார ஒயர் ஒன்று உரசிக் கொண்டிருந்ததை கவனிக்காத மாணவர்கள் கம்பத்தின் மீது கை வைக்கவே மாணவர்கள் மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவரும் பலியானார்.
 
இந்த கோர சம்பவத்தையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.