வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (14:34 IST)

இந்தியாவை பயத்தில் தள்ளிய 174 ரன்கள்

நேற்று நடைபெற்ற போட்டியில் ஹாக்காங் அணி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது.

 
ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் விளையாடியது. இது இந்திய அணிக்கு ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டி.
 
டாஸ் வென்ற ஹாங்காங் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிஷாகாத் கான் - அன்ஷுமான் ராத் கூட்டணி இந்திய அணியை கலங்க வைத்துவிட்டது.
 
34 ஓவர் வரை விக்கெட் வீழ்ச்சி இல்லை. 35வது ஓவரில் தான் ஹாங்காங் அணி முதல் விக்கெட்டை இழந்தது. இந்த கூட்டணி 174 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி மிகவும் கஷ்டப்பட்டது.
 
ஒருவழியாக குல்தீப் யாதவ் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து மற்ற வீரர்கள் தொடர்ந்து சரிந்தனர். 50 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஹாங்காங் அணி சிறப்பாக விளையாடியது. இந்திய அணி ஒரு கடினமாக சூழலை உருவாக்கியது. 45வது ஓவருக்கு பிறகுதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது.