1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Aswin telling reason for not selected in Indian team

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஏன்? மனம் திறந்த அஸ்வின்

அஸ்வின்
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னனி சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார் .  இதுகுறித்து அஸ்வின் முதன் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.   “ஒரு நாள் போட்டியில் என்னுடைய செயல்பாடுகள் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு    மோசமாக இருந்ததில்லை.  தற்போது மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்கள். அதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
                
கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017ல் விளையாடிய போட்டியில் நான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன். என்னுடைய முந்தைய ஆட்டங்களை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு. அதைவைத்து பார்க்கும் போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தேர்வு செய்யபடவில்லை. அதற்கும் என்னுடைய ஆட்டத் திறனிற்கும் சம்பந்தமில்லை" இவ்வாறு கூறியுள்ளார். 
About Writer
VM
அடுத்த கட்டுரையில்
பொட்டிப் படுக்கையைக் கூட இறக்கி வைக்கல… அதுக்குள்ள – ஹர்பஜன் அலப்பறைகள் !