1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (07:10 IST)

ஐதராபாத்தை வீழ்த்தி 4வது இடத்தை பிடித்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூர் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது