திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:13 IST)

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஐதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் என உயர்ந்தாலும் அதே எட்டாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு
 
சென்னை அணி: டூபிளஸ்சிஸ், ருத்ராஜ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹசில்வுட்
 
ஐதராபாத்: ஜேசன் ராய், சஹா, வில்லியம்சன், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்குஆர், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா