தொடர்புடைய செய்திகள்
- தொடர் தோல்வி எதிரொலி...பறிபோகிறதா கோலியின் கேப்டன் பதவி??
- 22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோல்வி… இந்தியா மோசமான சாதனை!
- தோல்விக்காக எந்த காரணத்தையும் கூற மாட்டேன்… கோலி ஆதங்கம்!
- கீர்த்தி சுரேஷ் அணிருத் திருமணமா? கோலிவுட்டில் பரவும் வைரல் செய்தி!
- 600 ரன்களை நோக்கி இங்கிலாந்து… டயர்டான இந்திய பந்துவீச்சாளர்கள்
எதையாவது தோண்டிக் கொண்டு இருக்காதீர்கள்… கோலி ஆவேசம்!
வீரர்கள் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்துக்கு கோலி பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய துணைக் கேப்டன் ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் அணிக்குள் கோலிக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளதா எனக் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எதையாவது தோண்டி எடுத்து பேசாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ரஹானே மற்றும் புஜாரா இருவருக்கும் அணியில் எப்போதும் முக்கியமான இடம் உண்டு. அவர்களின் நீண்ட கால பங்களிப்பால் உருவானது அது. ரஹானே ஆஸியில் சதமடித்தார். தொடரை வென்றோம். ஆனால் இப்போது ஒரு டெஸ்ட்; இரண்டு இன்னிங்ஸ்கள். அதில் அவர் சரியாக விளையாட வில்லை என்றால் உடனே விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
