செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (23:34 IST)

தொடர் தோல்வி எதிரொலி...பறிபோகிறதா கோலியின் கேப்டன் பதவி??

கோலி தலைமையிலான இந்திய அணி தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற  இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சரித்திரச் சாதனை படைத்தது. இதனால் இந்திய அணி பெரும் மகிழ்ச்சி அடைந்தது. ரஹானே தலைமையிலான இந்திய இளம் வீரர்களுக்கு உலகளவில் பெரும் பாராட்டுகள் குவிந்தது.

அப்போது  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், இந்திய அணியினர் ரொம்ப ஆட வேண்டும். இனிமேல் தான் உண்மையான கிரிகெட் விளையாடவுள்ளனர் என எச்சரித்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து அணியுடன் மோத தயாராகவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த முதல் டெஸ்டில் கோலி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் கோலிக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

நியூசிலாந்து, ஆஸ்த்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடிய கடைசி 4 போட்டிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அதேசமயம் ரஹானே தலைமையிலான இந்திய அணி ஒரு தோல்வி கூட சந்திக்கவில்லை அதனால் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிபோகலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி தோற்றதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் மிந்திய அணியை சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.