1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:34 IST)

22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோல்வி… இந்தியா மோசமான சாதனை!

இந்திய அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிகமான ரன்களைக் கொடுத்ததால் இந்திய அணி ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்தது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்தது . அதன் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வி அடைந்துள்ளது.