செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (16:25 IST)

600 ரன்களை நோக்கி இங்கிலாந்து… டயர்டான இந்திய பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து ஆடி வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி, 536 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தொடர்ந்து ஆடிவருகிறது. இரண்டாம் நாள் முடியப்போகும் நிலையில் இன்னமும் டிக்ளேர் அறிவிக்காததால் 600 ரன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.