ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)

கோலி ஓடி ஒளியக் கூடாது… முகமது அசாருதீன் கண்டனம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியுசிலாந்து அணிக்கெதிரான தோல்விக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்தார்.

தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ‘கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவேண்டும். ஓடி ஒளியக் கூடாது. பயிற்சியாளர் வந்து சந்திப்பதும், பூம்ரா சந்திப்பதும் கோலி சந்திப்பது போல ஆகாது. கோலி தோல்விக்கான காரணங்களை விளக்கவில்லை என்றால் அது தேவையில்லாத வதந்திகளை உருவாக்கும்’ எனக் கூறியுள்ளார்.