திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (17:22 IST)

தொடர் தோல்வி…. இந்திய அணியைக் கடுமையாக விமர்சனம் செய்த சரத்குமார்!

நடிகர் சரத்குமார் இந்திய அணியின் மோசமான தோல்வியை விமர்சனம் செய்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கோட்டைவிட்டது. இதனால் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் கடுமையான விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து பார்த்துவரும் தமிழ் நடிகரான சரத்குமார் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய டிவீட்டில் ‘அவமானகரமான பொறுப்பற்ற ஆட்டம். இன்னும் நாம் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளால் தோற்கடிக்கப்படும் முன் நாம் வெளியேறிவிடவேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள். அதனால் டி 20 ஆட்டத்தை தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் வீரர்கள் ஐபிஎல் விளையாடட்டும்’ எனக் கூறியுள்ளார்.