செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (11:24 IST)

தைரியமாக நாங்கள் ஆடவில்லை… கோலி வேதனை!

இந்திய அணியில் டி 20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு செல்வது என்பது கிட்டத்தட்ட எட்டாக்கனியாகி விட்டது.

நேற்றைய நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கோட்டைவிட்டது. இதனால் மோசமான தோல்வியைத் தழுவியது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாங்கள் தேவையான தைரியத்தோடு விளையாடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் உடல்மொழி சரியில்லை. ஷாட் ஆடுவதா அல்லது வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் இருந்தோம்.

இந்திய அணிக்காக ஆடும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும். நாங்கள் உற்று கவனிக்கப்படுகிறோம். டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை நம்பிக்கையோடு நாம் அடித்து ஆடவேண்டும். இன்னும் இந்த தொடரில் மீதம் கிரிக்கெட் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.