அம்பாத்தி ராயுடு vs விஜய் சங்கர் – கோஹ்லி யார் பக்கம் ?

Last Modified சனி, 20 ஏப்ரல் 2019 (09:16 IST)
உலகக்கோப்பையில் அம்பாத்தி ராயுடு மற்றும் விஜய சங்கர் இடையிலான தேர்வு பிரச்சனையில் அணித் தலைவர் விராட் கோஹ்லி பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடு இடம்பெறவில்லை.  அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்’ எனக் கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அம்பாத்தி ராயுடு டிவிட்டரில்’ உலகக்கோப்பையைக் காண இப்போதுதான் 3 டி கண்ணாடி வாங்கியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் இணைய உலகில் விஜய் சங்கர் vs அம்பாத்தி ராயுடு என மோதல்கள் உருவாகின. இருவருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது குறித்து பதில் அளித்துள்ளார். அதில் ‘ அணித்தேர்வுக்காக சில வீரர்களைப் பரிசோதித்தோம். ஆனால் விஜய் சங்கர் வந்தவுடன் அணி 3டி ஆகிவிட்டது. அவர் பேட் செய்வார், பவுலிங் போடுவார். நன்றாக பீல்டிங்கும் செய்வார். மற்ற அணிகள் அணியின் சமனிலையில் கவனம் செலுத்தும்போது ஏன் நாமும் அவ்வாறு செயல்படக் கூடாது?.. ஆனால் அவர் எந்த இடத்தில் இறங்குவார் என்பது பின்னர்தான் தெரியவரும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :