செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (19:05 IST)

உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு – கழட்டி விடப்பட்ட சாம் கரண் !

உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அற்சிவித்து விட்டன.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று தனது அணியை அறிவித்துள்ளது. இதில் சமீபகாலமாக கலக்கி வரும் ஆல்ரவுண்டர் சாம் கரன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் செஃப்ரி ஆச்சர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி :-

இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.

இந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த அணிக்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.