வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (21:43 IST)

விராத் கோஹ்லி அபார சதம்! கொல்கத்தாவுக்கு 214 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று 35வது போட்டியாக பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராத் கோஹ்லியின் அபார சதத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது. 
 
பெங்களூர் கேப்டன் அபாரமாக பேட்டிங் செய்து 58 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதேபோல் எம்.எம்.அலி 28 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டோனிஸ் 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார்.
 
கொல்கத்தா தரப்பில் கர்னி, நரேன், ரஸல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
 
இன்னும் சில நிமிடங்களில் 214 என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடவுள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் டெல்லியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது