திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:25 IST)

இந்திய அணியில் சிராஜுக்கு இடம் இல்லை… கோலியின் திட்டம் பலிக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே அஸ்வின், சபாஷ் நதீம் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  காயம் காரணமாக ஓராண்டாக விளையாடாத இஷாந்த் ஷர்மா அணிக்குள் வந்துள்ளதால் ஆஸியில் சிறப்பாக செயல்பட்ட சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.