1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:33 IST)

மீண்டும் அணிக்குள் வந்த இஷாந்த் ஷர்மா… யார் யாருக்கெல்லாம் சேப்பாக்கம் டெஸ்ட்டில் வாய்ப்பு!

சென்னையில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் 3 சுழல்பப்ந்து வீச்சாளர்களோடு இந்திய அணிக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் இரு டெஸ்ட் போட்டகள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து கொரோனா கால தனிமைப் படுத்துதலை முடித்துக்கொண்டு இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது. அஸ்வின், குல்தீப் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ள நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பூம்ரா இருப்பார் என சொல்லப்படுகிறது. காயம் காரணமாக அணியில் இல்லாமல் இருந்த இஷாந்த் சர்மா மீண்டும் திரும்பி உள்ள நிலையில் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அவர் இருப்பாரா அல்லது ஆஸியில் சிறப்பாக விளையாடிய சிராஜ் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.