திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:34 IST)

மனைவி பிரசவத்தின் போது...கிரிக்கெட் பார்த்தேன் - விராட் கோலி

தனது மனைவியின் பிரசவத்திற்கு முன்பாக மருத்துவர் தன்னை அறைக்குள் அழைப்பதற்கு முன்புவரை செல்போனில் ஷர்துல் தாக்கூர் – வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர் ஷிப்பை பார்த்துக்கொண்டிருந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலாவுக்குச் என்ற இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை அப்டைத்தது. கொலி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீர்கள் அணி சாதித்த்து.

முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய விராட் கோலி பாதியிலேயே தனது  மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக மும்பை திரும்பினார்.

அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தனது குழந்தைக்கு வாமிகா எனப் பெயர் சூட்டினார்.

இந்நிலையில், விராட் கோலி, தனது மனைவிக்குப் பிரசவம் நடக்கும்போது,நான் மருத்துவமனையில் இருந்தேன். அபோது மருத்துவர்கள் என்னை உள்ளே அழைக்கும் வரை நான் பிரிஸ்பேனில் வச்ஷிங்டன் சுந்தர்,ஹர்துல் தாக்கூர் பார்டனர்ஷிப்பை செல்போனில் ரசித்துப் பார்த்துக்கொண்டிருய்நெதேன் எனத் தெரித்துள்ளார்.