சர்ச்சைக்குள்ளாகும் கோஹ்லியின் கேப்டன்சி– முன்னாள் வீரர்கள் கருத்து

Last Modified வியாழன், 20 டிசம்பர் 2018 (08:00 IST)
பெர்த் டெஸ்ட்டில் கோஹ்லி நடந்து கொண்டவிதம் ஒரு கேப்டனுக்குரியதாக இல்லை என்று கிரிக்கெட் உலகில் பேச்சு எழுந்துள்ளது.

பெர்த் டெஸ்ட்டில் விராட் கோஹ்லி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன்னுடன் களத்தில் மோதிக்கொண்டதும் ஆட்டம் முடிந்த பின்னர் டிம் பெய்ன் கைகுலுக்க வந்த போது முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றதும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சாப்பல் இதுகுறித்து கிரிக்கெட் இணையதள ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் ‘கோலிக்கும் பெய்ன்னுக்கும் இடையே நடந்த சர்ச்சைக்குரிய மோதல் நடுவர்களின் எல்லைக்குடபட்ட விஷயம். நடுவர்கள் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதால் தவறாக எதுவும் நடக்கவில்லை எனப் புரிந்துகொள்ளலாம். கோஹ்லியின் சர்ச்சைக்குரிய கேட்ச்க்கு அவுட் கொடுத்ததில் இருந்தே அவரின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன.இதனால் அவரின் சமநிலைக் குறைய ஆரம்பித்தது. கோஹ்லி சம்பிராதயமான கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விக்கெட் எடுக்க அவர் இன்னும் முனைய வேண்டும். மொத்தத்தில் கோஹ்லியை விட பெய்ன் பெர்த் டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டார்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :