1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (18:29 IST)

கோலி சில்லறை தனமா நடந்துக்குறாரு - விளாசிய மிட்செல் ஜான்சன்!

பெர்த் டெஸ்ட் தொடருக்கு முன்பு விராட் தான் மாறிவிட்டதாக கூறியதாகவும் ஆனால் அவர் முன்பை போலவே தான் இப்போதும் இருக்கிறார் என்று கூறிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்  மிட்செல் ஜான்சன், கோலி மிகவும் சில்லியாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.


 
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டின்போது இரு அணி கேப்டன்களும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். ஆட்டம் முடிந்தபின்னர் இரு அணிகளும் ஸ்லெட்ஜிங் சகஜமானது என்று கூறி அடுத்த டெஸ்டிற்கு தயாராக சென்று விட்டனர்.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. மேலும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 
 
இதனிடையே இரண்டாவது டெஸ்ட்டின் போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மற்றும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே நடந்த வார்த்தை போர் கிரிக்கெட் உலகின் பேசு பொருளாகி உள்ளது. 
 
இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, "ஃபீல்டில் இருக்கும் போது ஸ்லெட்ஜிங் செய்வதை நானும் ரசிப்பேன். வார்த்தையிலும் களத்திலும் போர் இருப்பது நல்லது விஷயம் தான். ஆனால் கோலி இந்த தொடரின் தொடக்கத்தில் தான் பேசியதற்கு மாறாக நடந்து கொள்கிறார். அவர் மாறிவிட்டதாக முன்பு கூறினார். எனவே தானாக எதையும் தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த தொடரில் நடந்தது வேறாக இருக்கின்றது. நான் அவருடன் விளையாடியதை வைத்தும் தற்போது வெளியே இருந்து பார்க்கிறவற்றை வைத்தும் சொல்கிறேன். அவர் மாறவில்லை. இது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. 
 
2வது டெஸ்ட்டில் கோலியின் விக்கெட்டை கேட்ச் மூலம் பீட்டர் ஹேண்ட்கோப்ம் வீழ்த்தினார். அன்றைய தினம் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. பும்ரா தான் செய்தியாளர்களை சந்தித்தார். கோலி இதையெல்லாம் செய்யும் போது மிகவும் சில்லியாக இருக்கிறார்" என்றார்.