திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (10:31 IST)

வெற்றியை நோக்கி ஆஸி- விக்கெட் இல்லாத முதல் செஷன் !

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2 வது டெஸ்ட் போடியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14  பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னின்ஸில் ஹாரிஸ், ஹெட், பிஞ்ச் ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 326 ரன்களைக் குவித்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய இந்தியா புஜாரா, கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 283 ரன்கள் சேர்த்தது. விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் நடுவரிசை ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ரன்குவிப்பில் ஈடுபட்டது. நேற்றைய ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை சேர்த்திருந்தது.

இந்நிலையில் 4 வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. இன்று மதிய இடைவேளை வரை மேலும் விக்கெட் இழப்பின்றி வரை 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை சேர்த்துள்ள ஆஸி 232 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தின்றி வருகின்றனர். ஆஸியின் கவாஜா 67 ரன்களோடும் கேப்டன் பெய்ன் 37 ரன்களோடும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இன்னும் ஆஸி 70 ரன்கள் குவித்து 300 ரன்கள் முன்னிலை பெற்றாலும் வெற்றி வாய்ப்பு ஆஸிக்கே அதிகமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளின் 4 வது இன்னிங்ஸில் 300 ரன்களை சேஸ் செய்வது என்பது குதிரைகொம்புதான். எனவே ஆஸியின் வெற்றிக்கே இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம்