தொடர்புடைய செய்திகள்
- முன்னணி நடிகர் மற்றும் தயாரிபபாளர் மரணம்!
- தொடர்ந்து 1.50 லட்சத்திற்கு கீழ் குறையும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கும் மேல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
- தடுப்பூசி போட்டுக்கிட்டா பிரியாணி மற்றும் பல பரிசுகள்! – பொதுமக்கள் வரவேற்பு!
- தமிழ் சினிமாவில் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம்… ஆர் கே செல்வமணி தகவல்!
தோனியை களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது… கிரன் மோரே தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தேர்வுக்கு கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்த போது நிறைய புதுமுக வீரர்களை அறிமுகப்படுத்தி இந்திய அணியை மறு கட்டமைப்பு செய்தார். அவரின் தலைமையின் கீழ்தான் யுவ்ராஜ், கைப், ஜாகீர்கான், நெஹ்ரா, தோனி உள்ளிட்ட உலகத்தரம் மிக்க வீரர்கள் அறிமுகமானார்கள்.
இந்திய அணிக்கு அதிரடி பேட்டிங் விளையாடக் கூடிய விக்கெட் கீப்பர்க்கான தேடுதலின் போது கிடைத்தவர் தோனி. அவரை துலிப் கோப்பையில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். அதில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக வந்து 2 உலகக் கோப்பைகளை தன் தலைமையின் கீழ் பெற்றுத்தந்தார்.
