புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:45 IST)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் கைது – போதைப் பொருள் விவகாரத்தில் 2 ஆண்டு சிறை !

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பான்  நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானின் ஹொக்காய்டோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா ஜப்பான் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்போது சப்போரோநீதிமன்றம் அவருக்கு  2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.