பொளந்து கட்டிய வார்னர்: பஞ்சாப் அணிக்கு 213 இலக்கு

Last Modified திங்கள், 29 ஏப்ரல் 2019 (22:14 IST)
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது. வார்னர் மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்
வார்னரை அடுத்து மணிஷ் பாண்டே 36 ரன்களும், சஹா 28 ரன்களும், நபி 20 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்வின், ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், அர்ஷதீப் சிங், எம்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 213 என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணியினர் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர். கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.மிகப்பெரிய இலக்கு என்பதால் நேற்று ஹர்திக் பாண்ட்யா அடித்தது போல் இன்று கிறிஸ் கெய்ல் அடித்தால் மட்டுமே இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :