புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (14:33 IST)

ஹாஸ்டலில் பெண்களை அரை நிர்வாணப்படுத்திய வார்டன்? அதிர்ச்சி காரணம்

பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்த 12 மாணவிகளை அரை நிர்வாணமாக்கி சோதனை செய்த வார்டன்கள் மீது மாணவிகளின் போராட்டத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 
பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள விடுதியும் இருந்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட நாளன்று விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் கிடந்துள்ளது. 
 
இதை பார்த்த வார்டன்கள் யார் இவ்வாறு செய்தது என மாண்விகளை கேட்டுள்ளனர். யாரும் இதற்கு பதில் கூறாததால் 12 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். இது குறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 
 
ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மாணவிகளிடம் மோசமாக நடந்துக்கொண்ட வார்டன்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.