ஐதராபாத் அணி அபார வெற்றி! புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடம்!

Last Modified செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (06:22 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 48வது போட்டியில் பஞ்சாப் அணியை பந்தாடிய ஐதராபாத், 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நல்ல ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது. வார்னர் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 213 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, கெய்ல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்த்து. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். கேல்.எல்ராகுல் 56 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார்.
டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :