தொடர்புடைய செய்திகள்
- கோலி, ஜடேஜா, பண்ட் ரி எண்ட்ரி… இரண்டாவது டி 20 போட்டியில் யார் யார் நீக்கம்?
- ரிலீஸ் ஆனது ‘பொன்னியின் செல்வன்’ டீசர்: ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகம்
- மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: சிறப்பு விருந்தினராக கபில் தேவ் அழைப்பு
- குறைந்த இன்னிங்ஸ்களிக் 1000 ரன்கள்… கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித்!
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை… பல வருடங்களுக்குப் பிறகு டாப் 10 –ல் இருந்து வெளியேறிய கோலி
“அஷ்வினை உட்காரவைத்தால் கோலியையும் உட்காரவைக்க வேண்டும்”… முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும் விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர். இதையடுத்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கோலியை ஆடும் லெவனில் வைக்காமல் பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்தில் “சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலரை உட்காரவைத்துள்ளார்கள். அப்படி என்றால் ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தவரையும் உட்காரவைக்க வேண்டும். ப்ளேயிங் லெவன் என்பது தற்போதைய செயல்திறனை வைத்து அமையவேண்டும். வீரர்களின் கடந்தகால சாதனைகளை வைத்தல்ல. நம்மிடம் திறமையான பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் வெளியில் அமரவைப்பது நல்லதல்ல.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
