புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (15:06 IST)

இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை… ஆனால் ? – வில்லியம்ஸன் கருத்து !

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை ஆனால் அங்கு கிரீடம் சூட ஒரு வெற்றியாளர் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியப் போட்டியில் சூப்பர் ஓவரில் போட்டி டையாக பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஐசிசி யின் இந்த விதிகள் குறித்து ரசிகர்கள் உள்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இறுதிப் போட்டி குறித்து நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ‘இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் அங்கு மகுடம் சூடிக்கொள்ள ஒரு வெற்றியாளர் இருந்தார். விதிகள் விதிகள்தான் ‘ எனக் கூறியுள்ளார்.