உலகக்கோப்பை 2019 அணி – கோஹ்லி, தோனிக்கு இடமில்லை !

Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (12:12 IST)
உலகக்கோப்பைத் தொடர் முடிந்துள்ள நிலையில் உலகக்கோப்பை அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் ரோஹித் மற்றும் பூம்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

பரபரப்பாக இறுதிப்போட்டியோடு கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த உலகக்கோப்பைத் தொடர் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய கேப்டன் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியாவின் சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் பூம்ராவுக்கு இடம் கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை லெவன் அணி :-
ஜேசன் ராய், ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர், லாக்கி பெர்கூசன், ஜஸ்பிரித் பும்ரா.இதில் மேலும் படிக்கவும் :