கோப்பையை கையில் கூட ஏந்த விரும்பாத இங்கிலாந்து கோச்: காரணம் என்ன?

Last Updated: திங்கள், 15 ஜூலை 2019 (19:58 IST)
உலகக்கோப்பையை வென்றதும் அதனை கையில் கூட தூக்கி வர பிடிக்காமல் இங்கிலாந்த் கோச் அதனை தரையில் வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது. 
 
இங்கிலாந்து அணி கோப்பையை வென்றாலும் நியூசிலாந்த் அணிக்கும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கும் ஆறுதலும் பாரட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்த் அணியின் கோச் கோப்பையை தரையில் வைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
இந்த வீடியோவோடு கோச் வீரர்களே இந்த வெற்றிக்கு காரணம் என அதை கீழே வைப்பதாக பதிவிட்டுள்ளனர். ஆனால் இந்த பதிவை பார்த்த பலர் அவருக்கே தெரிந்துவிட்டது இந்த கோப்பையை வாங்கும் தகுதி நமகில்லை நியூசிலாந்து அணிக்கே உள்ளது என அதனால்தான் கோப்பையை தரையில் வைத்துவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :