வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (19:58 IST)

உலகக்கோப்பைக்கு பின் அணிகளின் தரவரிசை பட்டியல்:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒருவழியாக நேற்றுடன் முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பைக்க்கு பின் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் தற்போது வெளிவந்துள்ளது 
 
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து, நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா, ஐந்தாவது இடத்தில் தென்ஆப்பிரிக்கா , ஆறாவது இடத்தில் பாகிஸ்தான், ஏழாவது இடத்தில் பங்களாதேஷ், எட்டாவது இடத்தில் இலங்கை, ஒன்பதாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பத்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன 
 
இதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வீர்ர்களின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் விராத் கோஹ்லி, இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா, மூன்றாவது இடத்தில் பாபர் அஸம், நான்காவது இடத்தில் டூபிளஸ்சிஸ், 5வது இடத்தில் டெய்லர், ஆறாவது இடத்தில் வில்லியம்சன், ஏழாவது இடத்தில் டேவிட் வார்னர், 8வது இடத்தில் ஜோ ரூட், 9வது இடத்தில் டீகாக், மற்றும் 10வது இடத்தில் ஜேசன் ராய் ஆகியோர் உள்ளனர். 
 
இதேபோல் பந்து வீச்சில் முதல் 10 இடங்களில் உள்ள நபர்களில் முதலிடத்தில் இந்தியாவின் பும்ராவும், இரண்டாவது இடத்தில் டிரெண்ட் போல்ட், மூன்றாவது இடத்தில் ரபடா, நான்காவது இடத்தில் கம்மின்ஸ், ஐந்தாவது இடத்தில் இம்ரான் தாஹிர், ஆறாவது இடத்தில் ஜாட்ரான், ஏழாவது இடத்தில் கிறிஸ் வோக்ஸ், எட்டாவது இடத்தில் ஸ்டார்க், ஒன்பதாவது இடத்தில் ரஷித்கான் மற்றும் பத்தாவது இடத்தில் ஹென்றி ஆகியோர் உள்ளனர்.