வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:34 IST)

ஜோ ரூட்டின் ஹாட்ரிக் சதம்.. இந்த ஆண்டில் மட்டும் 6 – சாதனைக்கு மேல் சாதனை!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் நேற்று அடித்த சதத்தின் மூலம் இந்த தொடரில் ஹாட்ரிக் சதமடித்துள்ளார்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் முக்கியமான வீரர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் அரைசதத்தை சதமாக மாற்ற முடியாமல் தவித்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. நேற்று அவர் லீட்ஸில் அடித்த சதம் இந்த ஆண்டில் அவரின் 6 ஆவது சதமாகும். அதுபோல இந்த தொடரிலேயே 3 சதங்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 1398 ரன்கள் எடுத்துள்ளார். இது அவரின் ஒரு ஆண்டில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.