1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:53 IST)

இயக்குனர்கள் தயாரிக்கும் படத்தில் சூர்யா!

இயக்குனர்கள் 11 பேர் சேர்ந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தலைமையில் பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், இயக்குனர் சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் இணைந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஒரு படம் தொடங்குவதாக இருந்து பின்பு நிறுத்தப்பட்டது.