தொலைக்காட்சியில் சாதனைப் படைத்த கர்ணன்!
கர்ணன் படம் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது மிகப்பெரிய அளவில் டி ஆர் பி புள்ளிகள் பெற்றுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் கிடைத்தது.
அதன் பின்னர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து இப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. இந்நிலையில் கர்ணன் திரைப்படம் 9.4 டிவிஆர் புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.